முன்னுரை

You are missing some Flash content that should appear here! Perhaps your browser cannot display it, or maybe it did not initialize correctly.

இந்தப் பக்கத்தின் PDF பதிப்பு (20kb)

முதிர்ந்தோர் பயிலுனர் வாரம் அவுஸ்திரேலியாவில் கிடைக்கப்பெறும் முதிர்ந்தோர் கற்கைச் சந்தர்ப்பங்களின் சிறப்பை கொண்டாடுகிறது.

சமூகக் கல்வி எல்லா வயதுடைய மக்களுக்கும் மற்றும் எல்லா கல்விப் பின்புலத்தை உடைய மக்களுக்கும் கிடைக்கும். ஓவ்வொரு வருடமும் ஏராளமான அவுஸ்திரேலிய மக்கள் தொழில் திறன்கள், விவசாயம், வியாபாரம், கணினி, கலை மற்றும் கைத்திறன், இசை, உடல்நலம், சமையல் மற்றும் மொழிகள் ஆகியவற்றை சமூக கல்வி வழங்குநர்கள் மூலம் கற்கிறார்கள்.

சமூகக் கல்வி கட்டுப்படியானது இது சமூகக் கல்லூரிகள், சுற்றுப்புற வீடுகள், நூலகங்கள் மற்றும் டஃப் (TAFE) உட்பட்ட நட்பான பின்னணியில் வழங்கப்படுகிறது. சில புலம்பெயர்ந்தோர் மூலவள மையங்கள் கல்வித் திட்டங்களை வழங்குகின்றன அத்துடன் அவர்களும் உங்களது தேவையைப் ப+ர்த்திசெய்யும் படிப்புப் பிரிவொன்றைக் கண்டுபிடிக்க உதவலாம். நீங்கள் ஒரு முறைசாரா நடவடிக்கை குழுவை, ஒரு நாள் பட்டறை, அல்லது பல வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கும் படிப்புப் பிரிவொன்றில் சேரலாம்.

சான்றளிக்காத சமூக கல்வி (முறையான தகுதிக்கு இட்டுச்செல்லாத படிப்புப் பிரிவுகள்) கூடுதலான கல்வி, தொழில்வாய்ப்பு, தொழில் மாற்றம் ஆகியவற்றிற்கு ஆயத்தம் செய்வதற்கு ஒரு பெறுமதியான வழியாக இருக்கலாம். ஒரு குறுகிய படிப்புப் பிரிவு புதிய தொழில்நுட்பம் அல்லது தொழில்சார்ந்த திறன்களைப் பெற அல்லது சொந்த விருப்புகளை ஆய்வு செய்ய, உங்களது தொடர்பு திறன்களை முன்னேற்ற மற்றும் உங்களது சமூக மக்களைச் சந்திக்க உதவலாம். நீங்கள் அவுஸ்திரேலிய கல்வி முறைக்கு பழக்கப்பட மற்றும் தொழில் மற்றும் கற்றலில் புதிய சந்தர்பங்களை முன்னெடுக்க உங்களது தன்நம்பிக்கையை விருத்தி செய்யும்.

உங்களது வாழ்நாள் நீடித்த கல்விக்கு நல்ல அதிஷ்டம் உண்டாகட்டும்!